திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தனர். அதில், கிருஷ்ணாபுரம் சாலை குடியிருப்புகள் நிறைந்த பகுதியாகும். இந்த சாலையை அலங்கநாதபுரம், கீரைகடை தெரு, வசந்த நகர் ,கிழக்கு மற்றும் மேற்கு தாராநல்லூர், கிருஷ்ணாபுரம், முஸ்லிம் தெரு, கிருஷ்ணாபுரம் நடுத்தெரு பகுதிகளில் வசிக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி கல்லூரி மாணவர்கள் இந்த சாலை வழியாக கல்விக் கூடங்களுக்கு சென்று வருகின்றனர் . இந்நிலையில் கிருஷ்ணாபுரம் ரோட்டில் டாஸ்மாக் மதுபானக்கடை மற்றும் பார் அமைக்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.