குடிநீர் தட்டுப்பாடு அபாயம்; வறண்ட ஒகேனக்கல் காவிரி ஆறு!

2022-03-01 23

கோடைக்காலங்களில் கர்நடாக அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடாததால் ஒகேனக்கல் காவிரி ஆறு தண்ணீர் இல்லாமல் வறண்டுவிடும் இதனால் குடிநீர் பிரச்சனை ஏற்படும். இந்த நிலையில் தற்போது கோடைக்கு முன்னரே ஒகேனக்கல் காவிரி ஆறு வறண்டு வெறும் பாறைகளாக காணப்படுகிறது. இதனால் தருமபுரி,கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது. இதனால் குடிநீர் பற்றாக்குறை போக்க கர்நாடக அணைகளிலிருந்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Videos similaires