தியேட்டர் முன் பெட்ரோல் குண்டு வீசப்படும் காட்சிகள்; வைரல் வீடியோ!

2022-02-24 123

அஜித் நடித்த வலிமை திரைப்படம் இன்று நாடு முழுவதும் வெளியானது. தொடர்ந்து நேற்று முதலே ரசிகர்கள் தியேட்டர் முன்பு டிக்கெட் எடுக்க காத்திருந்த வண்ணமாக இருந்தனர். அஜித் ரசிகர்கள் நள்ளிரவு முதல் ஆட்டம் பாட்டத்துடன் படம் வெளியாக உள்ளதை கொண்டாடி வந்துள்ளனர். இன்று காலை கோவை காந்திபுரம் 100அடி சாலையில் உள்ள கங்கா,யமுனா, காவேரி திரையரங்கில் 5மணிக்கு காட்சி துவங்கியதும் ஏற்கனவே டிக்கெட் எடுத்து இருந்த ரசிகர்கள் மட்டும் திரையரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர். மீதமுள்ள ரசிகர்கள் அடுத்த காட்சியிற்க்காக காந்திருந்தபோது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு ஒன்றை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

Videos similaires