அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்களின் 74_வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் உள்ள புரட்சித் தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.