திருச்சி மாவட்டம் துறையூர் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஆய்வாளர் வடமலை நேற்று மாலை திருச்சி துறையூர் சாலையில் வாகனத் தணிக்கை செய்து கொண்டிருந்தார். அப்போது அவ் வழியாக வந்த இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது வாகனத்தை ஒட்டி நபர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து உதவி ஆய்வாளர் வடமலை அவரின் ஆவணங்களை கேட்டபொழுது மது போதையில் இருந்த ஆசாமி திடீரென போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளரை கன்னத்தில் திடீரென அறைந்து தாக்குதலில் ஈடுபட்டார்.