திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சி 36வது வார்டில் மணிமேகலை சுயேச்சையாக தென்னை மரச் சின்னத்தில் போட்டியிட்டார். இந்த நிலையில் வேட்பாளர் மணிமேகலை கணவர் துரைபாண்டியுடன் வந்து, தங்களுக்கு ஒட்டு போடும்படி கேட்டு, ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு கிராம் தங்க காசு என 1,500 பேருக்கு போலியான தங்க காசுகளை கொடுத்துவிட்டு தலைமறைவாகி விட்டனர்.