யானைகள் நடமாட்டம்; வாழை மரங்கள் சேதம்; வேதனையில் விவசாயிகள்!

2022-02-21 4

கோவை மாவட்டம் மேட்டுப்பாளைம் அருகே உள்ள தோலம்பாளையம், ஆதிமாதையனூர், சீலியூர், போத்தன்படுகை உள்ளிட்ட கிராமங்கள் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. இக்கிராம மக்கள் விவசாய நிலங்களில் வாழை, தென்னை, சோளம் மற்றும் காய்கறி பயிர்கள் பிரதானமாக விவசாயிகள் நடவு செய்து பராமரித்து வருகின்றனர்.இந்நிலையில் தோலம்பாளையம், ஆதிமாதையனூர் கிராமங்களில் கடந்த சில வாரங்களாக 3 காட்டு யானைகள் முகாமிட்டு இரவு நேரத்தில் விவசாய நிலத்தில் புகுந்து தென்னை மரங்களையும், வாழை கன்றுகளை சேதப்படுத்தி வருகிறது.

Videos similaires