கே.பி. சங்கர் ஏன் கட்சி பதவியிலிருந்து நீக்கப்பட்டார்? - பின்னணியில் பல கதைகள்!

2022-02-03 21

சென்னை மாநகராட்சிப் பொறியாளரைத் தாக்கியதாக எழுந்த புகாரையடுத்து, திருவொற்றியூர் தி.மு.க எம்.எல்.ஏ கே.பி.சங்கரை, அவர் வகித்துவந்த பகுதிச் செயலாளர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கியிருக்கிறது தி.மு.க தலைமை. இந்நிலையில் பொறியாளரைத் தாக்கியதாக சென்னை மாநகராட்சி சார்பில் கே.பி.சங்கர் மீது காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது. மேலும், எம்.எல்.ஏ-வால் தாக்கப்பட்டதாகச் சொல்லப்படும் பொறியாளர் தரப்பிலும், காவல்துறையில் புகாரளிக்க வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ‘எம்.எல்.ஏ - மாவட்டச் செயலாளர் தரப்புக்கிடையேயான மோதல்தான், பதவிப் பறிப்பின் பின்னணி’ என்கிறார்கள் வடசென்னை உ.பி-க்கள்!

Videos similaires