`தைப்பொங்கல்’ என்றாலே கடித்துச் சுவைக்கக் கரும்பும் பனங்கிழங்கும்தான் நினைவுக்கு வரும். சில பகுதிகளில் பொங்கல் வழிபாட்டில் இடம்பெறும் கிழங்கு வகைகளில் பனங்கிழங்கும் ஒன்று. இக்கிழங்கு செம்மண் மட்டுமல்லாது கரிசல் மண்ணிலும் வளரும் என்றாலும், செம்மண்ணில் விளையும் கிழங்குக்குத் தனிச்சுவை உண்டு. தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம் சுற்று வட்டார செம்மண் பகுதிகளில் பனங் கிழங்கு அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் சோனகன்விளையிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள மேலக் கானத்தில் பனங்கிழங்கு சாகுபடி செய்துவருகிறார் மணிமுத்து.
Credits:
Reporter : E.Karthikeyan | Camera : L.Rajendran | Edit : V.Srithar
Producer: M.Punniyamoorthy