news #பல லட்சக்கணக்கான வண்ண வண்ண மலர்களைக் கொண்டு மகாதீபத் திருவிழாவிற்காக அண்ணாமலையார் திருக்கோவில்

2021-11-20 1

பல லட்சக்கணக்கான வண்ண வண்ண மலர்களைக் கொண்டு மகாதீபத் திருவிழாவிற்காக தயாராகிவரும் அண்ணாமலையார் திருக்கோவில்... ஏழரை டன் பூக்களைக் கொண்டு பிரம்மாண்டமாக தயாராகி வரும் அண்ணாமலையார் திருக்கோவில்...

நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்க கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப பெருவிழா கடந்த நவம்பர் 10ஆம் தேதி தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது. நிறைவு நாளான நாளை அதிகாலை அண்ணாமலையார் கருவறையின் முன்பு நான்கு மணிக்கு பரணி தீபமும் அதனைத் தொடர்ந்து நாளை மாலை கோவில் பின்புறமுள்ள 2668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. நாளை நடைபெற உள்ள மகாதீப திருவிழாவிற்காக அண்ணாமலையார் திருக்கோவில் மிக பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த ஆதித்யாராம் பவுண்டேசன் நிர்வாக இயக்குனர் சுனிதா திம்மகவுடா சார்பில் ஆந்தூரியம், பல்வேறு வகையான ரோஜாக்கள், வெண்தாமரை, செந்தாமரை உள்ளிட்ட 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாமரை பூக்கள், ஆர்சிட்ஸ், கார்னேஷன், ஜிப்சோபிலா உள்ளிட்ட 20 வகைகள் கொண்ட சுமார் 25 லட்சம் மதிப்பில், ஏழரை டன் பூக்களைக் கொண்டு அண்ணாமலையார் திருக்கோவில் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன் சன்னதியில் உள்ள பலிபீடங்கள், கொடிமரங்கள், தீப தரிசன மண்டபம், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பூக்களைக் கொண்டு அலங்காரம் பிரம்மாண்டமாக செய்யப்பட்டு வருகிறது. வண்ண வண்ண மலர்களைக் கொண்டு திருக்கோவில் மதில் சுவர்கள், தூண்கள் உள்ளிட்ட இடங்களில் தோரணங்கள் ,பல்வேறு வகையில் பூக்களைக் கொண்டு பிரத்தியேகமான வடிவில் பல்வேறு உருவங்கள் உள்ளிட்டவைகள் செய்யப்பட்டு திருவிழாவிற்கு அண்ணாமலையார் திருக்கோவில் பூக்களால் பிரம்மாண்டமாக காட்சி அளித்து வருகிறது.

Free Traffic Exchange