தேனி அருகே அல்லிநகரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவிலில் 3 நாள் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது இரண்டாம் நாளான இன்று திருக்கோவிலில் கரகம் ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது இதனை தொடர்ந்து இப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் முளைப்பாரி ஏந்தி ஊர்வலம் நடத்தினர் விழா ஏற்பாடுகள் அனைத்தும் அல்லிநகரம் சேனைத்தலைவர் மகாஜன சங்கத்தின் சார்பில் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்