தமிழ் மரபு சார்ந்த பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகள், உணவுப் பழக்கங்கள் போன்ற வற்றை விட்டு விலகி நாம் இன்றைக்கு வெகுதூரம் வந்து விட்டோம். வேகத்தையும் விஞ்ஞானத்தையும் மட்டுமே பிரதானமாகக் கொண்டுள்ள இந்த உலகில், விட்டொழிந்த மரபுகளைத் தேடிச் செல்வது அரிதாகவே இருக்கிறது. இப்படியான சூழலில், ‘அழிவின் விளிம்பிலுள்ள மரபு ரக விதைகளை மீட்டெடுத்து பரவலாக்குவதே என் பணி’ என இயங்கி வருகிறார் திருப்பூரைச் சேர்ந்த விதை மனுஷி பிரியா ராஜ்நாராயணன்.