சாத்தூரில் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை

2021-08-11 12

சாத்தூரில் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு எச்சரிக்கை

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நகர்ப்பகுதிகளில் உள்ள மீன் மற்றும் இறைச்சி கடைகளில் சோதனை மேற்கொண்டனர். விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி உத்தரவின் பேரில் சாத்தூர் உணவு பாதுகாப்பு துறை ஆய்வாளர் மோகன் தலைமையில் மீன்வள ஆய்வாளர் அபுதாஹீர் மற்றும் மீன் வள மேற்பார்வையாளர் ராம கவுண்டன் ஆகியோர் அடங்கிய குழு வெங்கடாசலபுரம், பைபாஸ் ரோடு, தாயில்பட்டி ரோடு, மெயின் ரோடு, மற்றும் ரயில்வே பீடர் ரோடு ஆகிய பகுதியில் உள்ள மீன் மற்றும் இறைச்சி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் காலாவதி தேதிகள் குறிப்பிடப்படாத மற்றும் கெட்டுப் போன மீன் மற்றும் இறைச்சிகள் விற்பனை செய்யப்படுவது குறித்த சோதனை மேற்கொண்டு காலாவதியான மீன் மற்றும் இறைச்சிகளை பறிமுதல் செய்தனர். சோதனையில் சுமார் 150 கிலோவிற்கும் அதிகமான மீன் மற்றும் இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு அவற்றை பினாயில் மற்றும் பிளீச்சிங் பவுடர் போட்டு அழித்தனர். மேலும் கடைக்காரர்களிடம் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால் கடையை சீல் வைக்க நேரிடும் என்றும் என்று எச்சரித்தனர்.

Free Traffic Exchange

Videos similaires