விருதுநகரில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க 20 ஆண்டுகள் ஆகியும் இதுவரை வீடு கட்டித் தரவில்லை எனக் கூறி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

2021-08-09 14

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பா.ஜ.க. பட்டியல் அணி சார்பாக இலவச வீட்டு மனை பட்டா அளித்த இடத்தில் தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டி மனு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் மனு அளித்தனர்

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோட்டைப்பட்டி ஊராட்சியில் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட அருந்ததியர் சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர் இவர்கள் அன்றாடம் கூலி வேலை செய்து வரும் நிலையில் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வரும் நிலையில் இவர்களுக்கு கடந்த 2002ஆம் ஆண்டு தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக வீடற்ற ஆதிதிராவிட அருந்ததியர் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. அரசு பட்டா வழங்கி 20 வருடங்கள் ஆகியும் அந்த இடத்தில் இதுவரை வீடு கட்டித் தரவில்லை எனவும் கூலித்தொழில் செய்யும் தங்களால் சுயமாக வீடு கட்ட முடியவில்லை என கூறியும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கிய இடத்தில் வீடு கட்டித்தர வேண்டும் என சுமார் 40-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்

Free Traffic Exchange

Videos similaires