திருநெல்வேலி : எழுதும் போதே தூங்கும் குழந்தை , சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

2021-08-09 7

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுக்கா பள்ள வலை பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மனைவி இசக்கியம்மாள். இவர்களுக்கு விபின், சுஜின் என்ற இரு மகன்கள் இருக்கின்றனர். ஜெயராமன் அப்பகுதியில் உணவகம் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். கொரொனா ஊரடங்கின் காரணமாக அங்கன்வாடி மற்றும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் ஜெயராமன் தனது நான்கு வயது மகன் விபினை அடுத்த வருடம் முதல் வகுப்பில் அரசு பள்ளியில் சேர்க்க இருக்கிறார். இதனையடுத்து அவரது மூத்த மகனை அருகிலுள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்த்துள்ளார். அப்போது சிறுவன் தூக்கத்திலேயே abcd எழுதுவது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தூக்கத்திலேயே எழுத முயற்சிப்பதும் , பென்சில் தவறவிட்டு மீண்டும் எடுத்து எழுதாமல் தூங்கும் எழுதும் வீடியோ வைரலாகி வருகிறது. 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பதற்கான வாய்ப்பு இல்லாத நிலையில், . தங்களை குழந்தைகளை படிக்க வைக்க பெற்றோர்கள் எடுக்கும் முயற்சிகள் குழந்தைகளுக்கு தொந்தரவு கொடுக்காமல் மகிழ்ச்சியாய் இருந்தாலே போதும்

Videos similaires