Exclusive_ Rowdy Baby பாடலை Again Trend ஆக்கிய Doctor Baskar Interview _ Aval Vikatan

2021-04-28 10

ஹேய்... ரொம்ப உப்பு போடாதே.... ரொம்ப எடை போடாதே... உன் டாக்டர் சொல்லுறேன் கேளு...கேளு...யோவ்...தண்ணி போடாதே.... ஸ்மோக் பண்ணாதே... உன் டாக்டர் கெஞ்சுறேன் கேளு... கேளு....ஹேய்... மை டியர் பேஷன்ட்... நீ மனசுவெச்சா... பிபி குறைச்சிடலாம், நெஞ்சைக் காப்பாத்திடலாம்....
ரவுடி பேபி பாடலை உல்டா செய்து ஒரு டாக்டர் பாடிய பாடல் கடந்த சில நாள்களாக சோஷியல் மீடியாவில் செம வைரல். மக்களுக்கான ஆரோக்கிய விழிப்புணர்வை இப்படி பிரபல சினிமா பாடல்கள் மூலம் பாடி வீடியோவாகப் பதிவு செய்து பகிரும் இவர் டாக்டர் பாஸ்கர். லண்டனில் வசிப்பவரை வலைவீசித் தேடிப் பிடித்துப் பேசினோம்.