மேத்தா பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். முன்னணி பத்திரிகைகளில் சிறப்பு கட்டுரையாளர்களாக இருக்கிறார். பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து நரேந்திர மோடி அரசின் மீதும் தொடர்ந்து விமர்சனங்களை வைத்து வந்திருக்கிறார் மேத்தா. குறிப்பாக மூன்று வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகளின் போராட்டம் 100 நாட்களை கடந்தும் நடந்து கொண்டிருக்கும்நிலையில் அச்சட்டங்களை விமர்சித்து கட்டுரை எழுதியிருக்கிறார் மேத்தா. மேலும் கடந்த வருடம் The Wire இணைய இதழுக்கு பேட்டி கொடுக்கையில் பாஜக அரசை, ‘பாசிச அரசு’ என விமர்சித்திருக்கிறார். பல கட்டுரைகளில் பாஜக அரசு, நெருக்கடியை கொண்டு வந்த இந்திரா காந்தி அரசை காட்டிலும் பயங்கரமானது எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இது குறித்த கட்டுரையைப் படிக்க: http://bit.ly/3r96Bsu