வெளிநாடுகளில் மட்டுமே பிரபலமாக திகழ்ந்த சைக்கிளிங் இன்று இந்தியாவிலும் பிரசித்தி பெற்றதாக மாறத் தொடங்கியுள்ளது. தனிமை விரும்பிகள், இயற்கை ஆர்வலர்கள், உடற் பயிற்சியில் அதிக அக்கறை காட்டுபவர்கள் என பல தரப்பினரும் சைக்கிளிங் செய்யத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் சென்னை அண்ணா நகரை சேர்ந்த அபிராமி தனது 32 வயதில் சைக்கிளிங் செய்யத் தொடங்கி இன்று பல சரித்திர சாதனைகளை புரிந்துள்ளார்