உண்மை வரலாறு - தந்தைப் பெரியார் நாத்திகர் அல்ல! ஆனால் வேதத்தை எதிர்த்தாரே! கடவுளை மறுத்தாரே! ஏன்? =====

2021-01-27 2

உண்மை வரலாறு - தந்தைப் பெரியார் நாத்திகர் அல்ல! ஆனால் வேதத்தை எதிர்த்தாரே! கடவுளை மறுத்தாரே! ஏன்?
=====
https://youtu.be/yud_WmL9FUo
=====
வெளியிடும் நாள் இந்துமத ஆண்டு 43,73,122 செவ்வாய்க்கிழமை, தை மாதம் 26-01-2021.... குருதேவரின் அருளாட்சித் திருநாளாம் சனவரி 26ல்.
=====
இரண்டாவது கட்டத்துக்கு வரும்பொழுது, பெரியாரை பார்த்து வைத்திய நாத ஐயர்... இங்க உட்காரு! இராமசாமி இங்க உட்காரு! சாப்புடு! என்று சொன்னார். சரி.. இலை போட்டிருக்கவும், பெரியார் சட்டுனு உட்கார்ந்தாரு. கைவல்யம் வந்து கையை புடிச்சாரு. இராமசாமி, இதில் ஏதோ சூது இருக்கு நீ புரியவேணும் என்றார். பெரியார் ‘சும்மா இருங்கோ’ அப்படீன்னு உட்காந்துட்டாரு. அடுத்த கொஞ்சம் ஒரு நிலை வரும்பொழுது இன்னும் சில பேர் உட்கார வைக்கப்பட்டாங்க, எல்லா காங்கிரசுகாரங்கெல்லாம் ஒன்னா போய்கிட்டு இருக்காங்க. அந்த வைத்திய நாத ஐயர் மட்டும், இடம் பிடிச்சு, கையைப் பிடிச்சு, கையைப் பிடிச்சு, இங்க உட்காருங்கன்னாரு. அதுல இந்த முதலியார், பிள்ளைங்கிறவன் அப்படி உட்கார்ந்தாங்க. அதுக்கப்புறம் வெறும் ஐயர் மட்டும் உள்ள போனாங்க. பிறாமணர்கள் மட்டும். சாப்பாடு உள்ள நடந்துகிட்டு இருந்துச்சு. சோறு கொண்டுவந்து வச்சிட்டாங்க. சாம்பார் வர கொஞ்சம் நேரம் ஆச்சு. பரிமாறினவரு பிறாமணர் தான். சுவாமி கைவைல்யம் திடீர்னு
“அங்கேயே போட்டுக்கிட்டு இருக்கீங்களே ஐயா, இங்கே கொஞ்சம் சீக்கிரம் பரிமாறினால் என்ன?” அப்டீன்னு சொல்லும்போது, உள்ளூரு ஐயரு... இந்த காய்கறி வைச்சிட்டு இருந்தவரு... இந்த சூத்திர பையனெல்லாம் கத்துறான், கொண்டுவந்து போடு. இந்த சூத்திர பையன் கத்திண்டுருக்கான் கொண்டுவந்து போடுன்னாரு. கைவல்யம் எழுந்திருச்சி ஒரு போடு போட்டாரு, திடீர்னு முதுகுல...அடிச்சே போட்டார். பெரியார் கதறி கதறி... அவரு கையப்பிடிச்சு, என்ன நீங்க? அவங்கெல்லாம் பூதேசுவரர், அவங்கெல்லாம் தேவ வம்சம், அவர்கள் வாழக்கூடிய கடவுள், நடமாடக்கூடிய கடவுள், நீங்கள் அடிக்கலாமா, அய்யோ நரகத்துக்கில போயிருவீங்கன்னாரு. பதறினார் பெரியார் இராமசாமி நாயக்கரா.., சாதாரண இராமசாமி…, காங்கிரசு ராமசாமி பதறினார். கைவல்யம் சொன்னார், இராமசாமி! உங்க அம்மா கைனால நான் சாப்பாடு சாப்ட்டுருக்கேன். எனக்கு நெய் எடுத்து இலையிலே ஊத்த மாட்டாங்க. இட்லியை எடுத்து நெய்க்குள்ளேயே வச்சு தூக்கி வைப்பாங்கறேன். அந்த நன்றி விசுவாசத்துக்காக நான் அவனை அடிச்சேன்னாரு. அவன் என்ன சொன்னான் தெரியுமா? அந்தத் தேவிடியா மகன்லாம் சத்தம் போடுறியான். அவனுக்கு சோறு கொண்டானு சொல்றான். உங்க அம்மாவ தேவிடியானு சொன்னா என்னால தாங்கிக்கமுடியாது. ஆனால், நீ தாங்கிகிட்ட! நீ உங்க அம்மாவ தேவிடியானு ஒத்துகிட்ட... நான் ஒத்துகல... மறந்து விடாதே!!!
ராஜகோபாலாச்சாரியர்கிட்ட போய் மோதுறார், இப்படி தேவிடியா மகனு கேட்டானாமே? என்ன நினைச்சுகிட்டு இருக்கான்? இது எனக்கு தெரிஞ்சி இருந்தா என்ன ஆயிருக்கும் தெரியுமான்னாராம். டேய் சும்மா இருடா இராமசாமி! அப்படி சொல்றது ஒரு பழக்கம்தான், இதெல்லாம் போய் எடுத்துக்கிறியே. எவனாவது... என்னால பொய் சொல்ல முடியாது..., அதான் அர்த்தம்!!! ஆனால் அதைச் சொல்லிச் சொல்லி பழக்கம் ஆயிடுச்சி அதனால என்ன?
தேவிடியா மகனே! தேவிடியா மகனே! வாடா தேவிடியா மகனே! என கூப்பிடுவது பழக்கம் ஆயிடுச்சாம். எல்லாரும் ஒத்துக்கணும். இது தான் ராஜகோபாலாச்சாரியர் கொடுத்த விளக்கம்.
திண்டிவனத்திலே ஒரு மகாநாடு நடந்தது. 1924 - 1925 அந்த இடைவெளியிலே. அந்த மகாநாட்டிலே, பெரியார் ஒரு தீர்மானம் கொண்டு போனார். நம்ம காங்கிரசுக்குள்ள சாதிப்பெயர் யாரும் போட்டுக்க கூடாது.

Videos similaires