இனிப்புகள் விற்பனை செய்வதன் மூலம் குடும்ப வருமானத்திற்கு இம்ரான் தன்னால் முடிந்த அளவிற்கு பங்களிப்பு செய்கிறார். இம்ரான் தனது வியாபாரத்தை நேசிப்பதால் தான் கோவிட் -19 ஊரடங்கில் தளர்வுகள் ஏற்பட்டவுடன் வணிகத்தை தொடர முடிவு செய்துள்ளார். கடின உழைப்புதான் வெற்றிக்கு மிக முக்கியமான திறவுகோல். கடின உழைப்பு இல்லாமல் சாதனைகள் சாத்தியமற்றது. ஒரே இடத்தில் உட்கார்ந்து ஒரு சிறந்த வாய்ப்புக்காக காத்திருந்தால் ஒருபோதும் எதையும் பெற முடியாது. கடினமாக உழைக்கும் நபர் வாழ்க்கையில் வெற்றிகளையும் மகிழ்ச்சியையும் பெற முடியும். எந்தவொரு கடின உழைப்பும் செய்யாமல் வாழ்க்கையில் எதையும் அடைய முடியாது. மேற்சொன்ன வரிகளுக்கு ஏற்றார் போல் ஒரு உண்மை கதை கொல்கத்தாவில் நடந்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கொல்கத்தாவின் நாடியா மாவட்டத்தில் இருந்து இம்ரான் ஷேக் என்ற 19 வயது வாலிபர் தனது சைக்கிளில் தினமும் 120 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து இனிப்புகளை விற்று வருகிறார். கோவிட் -19 நெருக்கடியால் ஏற்பட்ட ஊரடங்கிற்கு பின்னர் உள்ளூர் ரயில் சேவை நிறுத்தப்பட்டதால் அவர் இத்தகைய நடவடிக்கையை எடுக்க வேண்டியிருந்தது என்று Mumbai Mirror செய்தி வெளியிட்டுள்ளது. நகரத்தில் இனிப்புகளை விற்க இம்ரான் தனது சைக்கிளில் தினமும் ஏழு முதல் எட்டு மணி நேரம் பயணம் செய்கிறார். #viral #sweets #inspiration