தினமும் தேடிவரும் 4 மலை அணில்கள்... நீலகிரியில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்! #petlover

2020-11-06 4

MEENAKSHI COLLEGE OF NURSING, MANGADU, CHENNAI- http://www.mcon.ac.in/
Reporter - சதீஸ் ராமசாமி
Camera - கே.அருண்
குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகில் பழக்கடை நடத்திவரும் நசீமாவைத் தேடி இரண்டு ஆண்டுகளாக ஒரு மலை அணில் நாள் தவறாமல் வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது கூடுதலாக மூன்று அணில்கள் வந்து பழங்களைச் சுவைத்துச் செல்கின்றன.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நாள் தவறாது தேடி வரும் (Malabar gaint squirrel) மலை அணிலால் உள்ளூர் மக்களிடமும் சுற்றுலாப் பயணிகளிடமும் நன்கு பரிச்சயமானவர் பழ வியாபாரி நசீமா.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்கா சாலையோரத்தில் பழக்கடை நடத்திவரும் நசீமாவைத் தேடி மலை அணில் ஒன்று நாள்தோறும் வந்து பழங்களை வாங்கிச் சுவைத்துச் செல்கிறது. ஆரம்பத்தில் ஒரு அணில் மட்டுமே வந்துகொண்டிருந்த நிலையில், தற்போது 4 அணில்கள் அவர் தரும் பழங்களைச் சுவைத்துச் செல்கின்றன.

வறுமையை எதிர்கொள்ள பூங்கா வாசலில் சிறிய அளவிலான கடையை நடத்திவந்தாலும், எந்தக் கணக்கும் பார்க்காமல் ஒரு நாளைக்கு இரண்டு கிலோ பழங்களை அணில்களுக்கு வழங்கி வரும் இவரது விலங்கு நேசம் அனைவரையும் திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது.

Videos similaires