Reporter - துரை.நாகராஜன்
விவசாயம் சார்ந்த ஒரு தொழில் தொடங்குறதுக்கு ஏக்கர் கணக்குல நிலம் எல்லாம் சொந்தமா இருக்கணும்ங்குற தேவையில்லை. என்கிட்ட வெறும் 7 சென்ட் நிலம்தான் இருக்கு. அதுலதான் இவை அத்தனையும் சாத்தியமாகியிருக்கு."
``நான் 3 டிகிரி முடிச்சிருக்கேன். பொதுவா படிச்ச பெண்கள் மாடுகளைப் பராமரிக்கிறது மாதிரியான வேலைக்கு வர யோசிப்பாங்க. ஆனா, நான் அப்படி இல்ல. எனக்கு இந்த வேலை புடிச்சிருக்கு. இதுல இருந்து மாசத்துக்கு 30,000 ரூபாய் வரைக்கும் லாபம் பார்த்துக்கிட்டிருக்கேன். இந்த வேலை பார்க்கிறதால என் வீட்டையும் நல்லா கவனிக்க முடியுது. நல்ல வருமானமும் கிடைக்குது" என்று மகிழ்ச்சியுடன் ஆரம்பிக்கிறார், காஞ்சிபுரம் மாவட்டம், கூரம் கேட் கிராமத்தைச் சேர்ந்த நிர்மலா தேவி. பண்ணையில் வேலை நிமித்தமாக இருந்தவரிடம் பேசினோம்.