விபரீத முடிவெடுத்த விஜய் ரசிகர்! யார் இந்த பாலா! #ripbala

2020-11-06 0

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நடிகர் விஜய்யின் ரசிகர் ஒருவர் `தலைவனையும், தலைவன் படத்தையும் பார்க்காமலே போறேன்’ என்று டிவிட்டரில் பதிவிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் - மலர் தம்பதியினரின் மகன் பாலமுருகன். 23 வயதான இவர் டிப்ளமோ சிவில் இன்ஜினீயரிங் படிப்பை முடித்திருக்கிறார். தீவிர விஜய் ரசிகரான இவர், `பாலா விஜய் மாஸ்டர்’ என்ற பெயரில் டிவிட்டரில் இயங்கி வந்திருக்கிறார். விஜய் திரைப்படம் தொடர்பான டீசர்கள், படங்கள் போன்றவற்றை அன்றாடம் பகிர்வதை வாடிக்கையாக வைத்திருந்த இவர், நேற்று தியாகதுருகத்தில் இருக்கும் தனது சகோதரி வீட்டில் தூக்குப் போட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
#actorvijay #RIPBala #RIPBalaVijay

Videos similaires