#Kerala #Ambulancedriver #Corona #Covid19
கேரள மாநிலம், பத்தணம்திட்டா மாவட்டம், அடூர் வடக்கோடத்துகாவு பகுதியிலிருந்து கொரோனா பாதித்த 45 வயது மற்றும் 20 வயது ஆன இரண்டு பெண்களுக்கு முதற்கட்ட சிகிச்சையளிக்க 108 ஆம்புலன்ஸில் கொரோனா சிகிச்சை மையத்துக்கு நேற்று இரவு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆம்புலன்ஸ் டிரைவர் நெளஃபல் மற்றும் இரண்டு பெண்கள் மட்டுமே ஆம்புலன்ஸில் இருந்தனர். 42 வயது பெண்ணை கோழஞ்சேரி பொது மருத்துவமனையிலும், 20 வயதுப் பெண்ணை பந்தளத்திலும் சிகிச்சைக்காகச் சேர்க்க வேண்டும் என நெளஃபலுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. வடக்கோடத்துகாவு பகுதியிலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தூரத்திலுள்ள கோழஞ்சேரி மருத்துவமனையில் 45 வயது பெண்ணை கொண்டுபோய் விட்டார் நெளஃபல்.
அடுத்ததாக பந்தளம் மருத்துவமனைக்கு 20 வயது பெண்ணை ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றார். பந்தளம் செல்லும் வழியில் ஆறன்முளா விமான நிலையத்துக்காக நிலம் எடுக்கப்பட்ட ஒதுக்குப்புறமான பகுதியில் ஆம்புலன்ஸை நிறுத்தியிருக்கிறார் நெளஃபல். அங்கு ஆம்புலன்ஸில் இருந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.
இந்த வழக்கில் ஆம்புலன்ஸ் டிரைவர் நெளஃபலை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா உத்தரவின்பேரில் நெளஃபல் ஆம்புலன்ஸ் டிரைவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா கூறுகையில், ``ஆம்புலன்ஸ் டிரைவரின் இந்தச் செயல் எதிர்பாராதவிதமானது. கடந்த ஆட்சியில்தான் இந்த டிரைவர் நியமிக்கப்பட்டார். அனைத்து ஆம்புலன்ஸ் டிரைவர்களின் பின்னணிகள் குறித்து விசாரணை நடத்தப்படும். அபாய நிலையிலுள்ள நோயாளிகள் மட்டுமே இரவு நேரத்தில் ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்படுவார்கள். பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்" என்றார்.
Two women, aged 45 and 20, from Adoor North, Pathanamthitta district, Kerala, were taken to Corona Medical Center in 108 ambulances last night for first aid. Ambulance driver Noufal and two women were in the ambulance.
Noufal took a 45-year-old woman to the Kozhencherry hospital, about 18 kilometers from Vadakodattukavu. He then took the 20-year-old woman to Pandalam Hospital in an ambulance. On the way to Pandalam, Noufal parked the ambulance in a secluded area where land had been taken for Aranmula Airport. The woman in the ambulance has been sex