சாத்தான்குளம் காவல்துறையால் அடித்துக்கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலரிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்துக்கு கடந்த மாதம் 19-ம் தேதி இரவு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸாரின் கொடூரத் தாக்குதலில் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் நடத்திய விசாரணையில் 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
#Sathankulam #CustodialDeath #JusticeForJayarajAndBennix #JusticeForJayarajAndFenix #NewsToday