இவற்றை UFO எனக் குறிப்பிடாமல் 'unidentified aerial phenomena' என்றே குறிப்பிட்டிருக்கிறது பென்டகன். அதாவது, "இன்னும் இந்த வீடியோக்களில் இருப்பது என்னவென்பது தெளிவாக தெரியவில்லை" என்று பென்டகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் இருக்கும் ஒவ்வோர் எழுத்தும் பால் வெளியில் தோன்றும் நட்சத்திரங்கள், அவற்றைச் சுற்றிவரும் கோள்கள், அந்தக் கோள்களில் உயிர் வாழ்வதற்கான தன்மைகள் எவ்வளவு இருக்கலாம் என்பதைக் குறிக்கின்றன. துல்லியமாக இத்தனை நட்சத்திரங்கள் இருக்கின்றன, இத்தனை கோள்கள் இருக்கின்றன என நம்மால் கணக்கிட முடிந்தால், நம் பால்வெளியில் வேறு ஒரு நாகரிகம் இருக்கிறதா இல்லையா என நம்மால் கூறி விட முடியும். ஆனால், இவற்றில் ஒன்றிற்குக்கூட நமக்கு விடை தெரியாது. ஆனால், ஒவ்வொன்றிற்கும் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச தொகையைப் போட்டு இத்தனை நாகரிகங்கள் தோன்றியிருக்கலாம் எனத் தோராயமாகக் கூற முடியும். அதன்படி பால்வெளியில் மட்டும் 1000-ல் இருந்து 100,000,000 நாகரிகங்கள் (அதாவது வேற்று கிரக வாசிகள்) வரை தோன்றியிருக்கலாம் என்கிறது இந்தச் சமன்பாடு.
CREDITS - பிரசன்னா ஆதித்யா
#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India