அலட்சிய ஆசிரியர்கள்! சிறுமியின் உயிரைப் பறித்த பாம்பு!

2020-11-06 5

கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் புத்தன்குந்நு பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் அப்துல்லா சீஸ்-ஷஜினா தம்பதியின் மகள், ஷஹ்லா ஷெரின். ஷஹ்லா ஷெரின், சுல்தான் பத்தேரி அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துவந்தார். நேற்று மாலை வகுப்பறையில் பெஞ்சில் இருக்கும்போது, காலில் ஏதோ கடித்துள்ளது. வலியால் துடித்த ஷஹ்லா ஷெரின், அதுகுறித்து ஆசிரியரிடம் கூறியுள்ளார்.'பாம்பு கடித்துவிட்டது' என மாணவி கூறிய பிறகும் ஆசிரியர்கள் அவளை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லவில்லை. ஆசிரியர்கள் சொந்தமாக கார் வைத்திருந்தும் மாணவியை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல முன்வரவில்லை. #Kerala #viral #NeedJustice

Reporter - சிந்து ஆர்


In Kerala, a girl died due to snake bite. A 10-year-old girl from Wayanad had reported to her class teacher that she was bitten by a snake in her classroom. But the teachers have neglected that. After her parents came to the school, they took her to the hospital. But, unfortunately, she died.

Videos similaires