`எப்படிப்பட்டச் சூழலிலும் நான் வாழ வேண்டும்; வாழ்வேன்’ என்று நினைப்பதேகூட நேர்மறைச் சிந்தனை, நம்பிக்கைதான். இந்த உறுதியான எண்ணம் எப்பேர்ப்பட்ட இன்னல்கள், பிரச்னைகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் துணிவைத் தரும். அப்படிப்பட்ட ஒரு நம்பிக்கையால் ஒரு பேராபத்திலிருந்து உயிர்பிழைத்து, சாதனைபுரிந்த ஒரு பெண்ணின் நிஜக் கதை இது.