வாகா எல்லையில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு, அவரை வரவேற்றனர். மேலும், இந்திய விமானப்படையைச் சேர்ந்த இரு அதிகாரிகள், பாகிஸ்தான் அதிகாரிகளிடமிருந்து அபிநந்தனை நடைமுறை விதிகளின்படி அழைத்துச்சென்றனர். பாகிஸ்தான் தரப்பிலிருந்து ஒரு பெண் அதிகாரியே அபிநந்தனை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.