பல மாதங்களாகப் பெரிய அளவில் பேசப்படாமல் இருந்த தே.மு.தி.க., இந்த தேர்தலில் மீண்டும் துருப்புசீட்டாக மாறியிருக்கிறது. அந்தக் கட்சி எப்படியும் அ.தி.மு.க கூட்டணிக்குள் வந்துவிடும் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், இந்தப் புத்தகம் அச்சில் ஏறும்வரை விஜயகாந்த் தரப்பில் எந்த முடிவையும் எடுக்கவில்லை.