``நான் ஏழ்மையான வீட்டுப் பையன். நான் இதுவரை கரூர் மாவட்டத்தைத் தாண்டி எங்கும் போனதில்லை. ஆனால், அரசுப் பள்ளியில் படித்த எனக்கு, ஆசிரியர்கள் தந்த ஊக்கத்தால் இப்போ ஸ்வீடன், பின்லாந்து வரை செல்ல வாய்ப்பு கிடைச்சிருக்கு. வாழ்நாளுக்கும் மறக்கமுடியாது வாய்ப்பு இது" என்று நெகிழ்ந்துபோய் சொன்னார் அரசுப் பள்ளி மாணவரான சதிஷ்குமார்.