கள்ளக்காதலியோடு சதித்திட்டம் தீட்டிய கணவன்! திடுக்கிடும் பின்னணி!

2020-11-06 0

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியைச் சேர்ந்த வங்கி ஊழியர் தீபிகா கடந்த அக்டோபர் 27-ம் தேதி இரவு, 8-வது மாடியிலுள்ள இவரது குடியிருப்பில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இவ்விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரின் கணவர் விக்ரம் சிங் சவுகானை கைது செய்தனர். விக்ரம் சிங்குக்கும் அப்பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.சம்பவத்தன்று இருவருக்கும் இடையே சண்டை முற்றியுள்ளது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த விக்ரம் தன் மனைவியை பால்கனியில் இருந்து தள்ளிவிட்டுக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Videos similaires