தமிழக அரசின் பல்வேறு துறைகள் நிதி நெருக்கடியால் தள்ளாடுகின்றன.அ.தி.மு.க-வின் கடந்த ஏழரை ஆண்டு ஆட்சிக்குப்பின் தற்போதைய கடன் சுமை, மூன்று லட்சத்து 55 ஆயிரத்து 845 கோடி ரூபாய். ஆண்டுக்கு அரசு செலுத்தும் வட்டி மட்டுமே 29, 624 கோடி ரூபாய். எதற்கு இந்தப் புள்ளிவிவரங்கள் என்கிறீர்களா? இப்படியான சூழலில்தான் பொங்கல் பரிசுடன், ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் தலா ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசை அறிவித்துள்ளது தமிழக அரசு. இதனால் அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவு 2,250 கோடி ரூபாய்.