தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்களைப் புரட்டிப்போட்டுவிட்டது `கஜா' புயல். வீடுகள், விவசாய நிலங்கள் கடும் சேதமடைந்துள்ளன. அங்குள்ள மரங்கள் வேறோடு சாய்ந்ததால், பொதுமக்கள் சொல்ல முடியாத துயரில் தவித்துவருகின்றனர். அந்த மக்களுக்கு தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து உதவிப் பொருள்களும் நிவாரணப் பொருள்களும் வந்துகொண்டிருக்கின்றன. அப்படி நிவாரணப் பொருள்களைக் கொண்டுசென்ற இளைஞர்களை நெகிழவைத்துள்ளனர், பேராவூரணி விவசாயிகள்.