எங்கு பார்த்தாலும் தண்ணீர், சாலையில் சாய்ந்த மரங்கள், அறுந்து கிடக்கும் மின்கம்பிகள் எனக் கடவுள் தேசமே மழையால் சூறையாடப்பட்டிருக்கிறது. வட கேரளாவில் பெரும்பாலான பகுதிகள் தொடர் மழை காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.