ஐந்து மாதங்களுக்கு முன்பு, ரயில் விபத்து ஒன்றில் கால்களைப் பறிகொடுத்த காதலன் விஜய்யை, அரசு மருத்துவமனையிலேயே திருமணம் செய்துகொண்ட ஷில்பாவை ஞாபகம் இருக்கிறதா. அந்தக் காதல் தம்பதியர் தற்போது எப்படி இருக்கிறார்கள் எனத் தெரிந்துகொள்ள வேலூரை அடுத்த வாணியம்பாடியில் இருக்கும் விஜய் அம்மாவைத் தொடர்புகொண்டேன். மகனைப் பற்றி விசாரித்ததும், உடைந்து அழ ஆரம்பித்துவிட்டார்.