உடுமலைப்பேட்டையை அடுத்த குடிமங்கலம் கிராமத்தின் மத்தியில் இயங்குகிறது முத்தாத்தாவின் உலகம். அங்கு இருக்கும் ஆரம்பப் பள்ளியின் வேப்பமர நிழலில் மிட்டாய் கடை வைத்திருக்கிறார் முத்தாத்தா.யாரும் வராத,பெரிதாக எந்தப் பொருளும் இல்லாத கடையில் இந்த மூதாட்டியால் எப்படி அமர்ந்திருக்க முடிகிறது? பள்ளிப் பிள்ளைகளை நம்பி வைத்திருக்கும் இந்தக் கடையில் வியாபாரம் நடக்கிறதா... எதைக் கொண்டு இவர் ஜீவனம் செய்கிறார்...?