நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகில் உள்ள ஆனைக்குடி கிராமத்தைச் சேர்ந்த ராக்கெட் ராஜா மீது இருபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. நெல்லைப் பேராசிரியர் செந்தில்குமார், கொலை செய்யப்பட்ட வழக்கில் ராக்கெட் ராஜாவைப் போலீஸார் தேடிவந்தனர். இந்த நிலையில், அண்ணா சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில், ஒன்பதாவது மாடியில் ராக்கெட் ராஜா தங்கியிருக்கும் தகவல், ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு போலீஸாருக்குக் கிடைத்தது. அதன்பேரில், அதிகாலையில் அதிரடியாக ஹோட்டலுக்குள் நுழைந்த போலீஸார், ராக்கெட் ராஜா மற்றும் அவரது கூட்டாளிகளைக் கைதுசெய்தனர்.
plan behind rocket rajas arrest