எழுத்தாளர் பாலகுமாரன், தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி வட்டத்தில் உள்ள பழமார்நேரியில் 1946-ல் ஜூலை 5-ம் தேதி பிறந்தார். இவரின் தந்தை தமிழாசிரியர். பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர், தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்று, தனியார் நிறுவனத்தில் 1969-ம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றினார். அப்போது, கவிதைகள் எழுதத் தொடங்கினார். அதில் சில கணையாழி இதழில் வெளிவந்தன. பின்னர், அதிகாரி அந்தஸ்துக்கு உயர்ந்தார். திரைத்துறையில் பணியாற்றுவதற்காகத் தன் வேலையைத் துறந்தார்.
tamil writer balakumaran passed away