நாகை மாவட்டம், கீழ்வேளூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (37). இவரின் தம்பி ராஜூ (30). இருவரும் கொத்தனார் வேலைபார்த்துவந்தனர். கணேசனுக்கு சத்யா என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். ஒரு ஆண்டுக்கு முன் திருமணமான ராஜுவின் மனைவி விஜயா, தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். அண்ணணும் தம்பியும் அதீத பாசத்துடன் வாழ்ந்துவந்துள்ளனர். திருமணத்துக்குப் பிறகு, அருகிலுள்ள பாலக்குறிச்சியில் மனைவியுடன் ராஜூ வசித்தார். அவ்வப்போது, அண்ணனைப் பார்க்க கீழ்வேளுர் வருவார். நேற்று காலை, அண்ணனைப் பார்க்க ராஜூ வந்தபோது, கணேசன் தன் வீட்டில் உள்ள ஸ்விட்ச் போர்டை ரிப்பேர் பார்த்துக்கொண்டிருந்தார்.
electricity struck brothers died in nagapattinam