ஏழு முறை மின்னல் தாக்கியும் உயிர் பிழைத்த மனிதர்! #RoySullivan

2020-11-06 1

இந்த ஏழு முறை மின்னல் தாக்கியது பதிவு செய்யப்பட்டு நிரூபிக்கப்பட்டாலும், தன்னை எட்டு முறை மின்னல் தாக்கியுள்ளது என்று சொன்னார் ராய். சிறு வயதில், தன் தந்தையுடன், கோதுமை அறுவடை செய்துகொண்டிருந்தபோது, முதன் முறையாகத் தன்னை மின்னல் தாக்கியதாகவும், ஆனால், அப்போது எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்கிறார். அதை தன்னால் ஒரு போதும் நிரூபிக்க முடியாது என்பதால் அதை மறந்தே போனார். நேஷனல் ஜியோக்ராஃபிக் நிறுவனத்தின் ஆய்வின் படி, மின்னல் தாக்கப்பட்டவர்களில், சராசரியாக 10 முதல் 30 சதவிகிதம் பேர் மட்டுமே இறக்கின்றனர். அதேபோல் அமெரிக்காவில், மூவாயிரத்தில் ஒருவரை தான் மின்னலே தாக்குகிறது. விர்ஜினியா மாகாணமும், வருடத்துக்கு 35ல் இருந்து 45 நாள்கள் புயலைப் பார்க்கிறது. எனவே, மின்னல் ராய் சல்லிவன் அவர்களைச் சற்று அதிகமாகவே தாக்கியது என்றாலும், அவர் இறந்து போகும் அளவுக்குக் கொடூரமான மின்னல் ஒரு போதும் அவரை நெருங்கவில்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ஏழு முறை மின்னல் தாக்கியும் பிழைத்தால், உலகிலேயே அதிக முறை மின்னல் தாக்கிய மனிதர் என்று கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்றார்.

a man named roy sullivan was struck by lightning seven times

Videos similaires