சென்னையின் சுட்டெரிக்கும் வெயிலில் எண்ணெய்யை ஊற்றியதுபோல, தி.நகர் வெப்பத்தில் கொதிக்கிறது. நேற்று, சென்னை சில்க்ஸில் பற்றிக்கொண்ட தீயின் வேகம் கட்டற்றது. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வியர்வை வழிய தீயணைப்பு வீரர்களும் காவல் துறை அதிகாரிகளும் தீயோடு போராடிக்கொண்டிருக்கிறார்கள்.