வேலைக்குப் போகக் கூடாது. அவர் கையை நம்பி இருக்கணும். சரி, அதுக்கும் அவர் சரியா நடந்துக்கணுமில்லே. இப்படி குடிச்சே குடும்பத்தைக் கஷ்டப்படுத்தினா எப்படிங்க நிம்மதியா வாழ முடியும்? அவர்கூட வாழ்ந்தது போதும்னு முடிவு பண்ணிட்டேன். அதனாலதான் அவர்கிட்ட விவாகரத்து கேட்டிருக்கேன். என் மேல இருக்கிற பொசசிவ்னாலதான் இப்படி நடந்துக்கிட்டார்னு நினைச்சேன்.