தீவிரவாதத்துக்கு துணைபுரிவதாகக் குற்றம்சாட்டப்பட்ட QATAR நாடு, வளைகுடா நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. SAUDI, ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட நாடுகள் கத்தாருடனான தங்கள் தூதரக உறவுகள் அனைத்தையும் முறித்துக்கொண்டன. வான் வழியிலும் கடல் வழியிலும் கத்தார் விமானங்கள், கப்பல்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.