மல்பெர்ரி பற்றி நமக்கு தெரியாத சில மருத்துவ குணங்கள்!

2020-11-06 2

கைக்கு எட்டும் தூரத்தில் பயன்களை வைத்துக்கொண்டு ஊரெல்லாம் அதற்கான மருந்தைத் தேடி அலைவது மனித குணம். அப்படி ஓர் அருமருந்து மல்பெர்ரி. கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு நன்கு பரிச்சயமான பழம். கிராமத்தில் ஓடியாடி விளையாடும் சிறுவர்கள் விளையாட்டுத்தனமாக மரத்திலிருந்து சில பழங்களைப் பறித்துச் சுவைத்துப் பார்ப்பது உண்டு. ஆனால், பெரியவர்களோ அதன் பயன்கள், மருத்துவக் குணம் ஆகியவற்றை அறியாமல் மல்பெர்ரியை உதாசீனப்படுத்தி வருகிறோம். இதன் வகைகள், உடலுக்கு அள்ளி அள்ளித் தரும் பயன்கள் அனைத்தையும் இங்கே பார்ப்போம்