குங்குமப்பூ... Crocus Sativus என்ற தாவரவியல் பெயரைக்கொண்டது. சாஃப்ரான் க்ரோகஸ் (Saffron Crocus) என்ற செடியின் பூவிலுள்ள சூலகத் தண்டு, மற்றும் சூலக முடிகள் ஆகியவற்றைத் தனியே பிரித்து, வெயிலில் உலர்த்திப் பொடியாக்கப்படுவதே குங்குமப்பூ. இதனுடன் வேறு எந்தப் பொருளும் சேர்க்கப்படுவதில்லை.