மிடாஸ் சாராய ஆலையை மனதில் வைத்துத்தான், நீரா பானத்துக்கு ஜெயலலிதா அனுமதி கொடுக்கவில்லை. அவர் செய்யாததை நான் நிறைவேற்றியிருக்கிறேன். வரும் நாட்களில் பனைமரத்துக் கீழேயே கள்ளை இறக்குவதற்கும் அனுமதி கொடுக்கும் முடிவில் இருக்கிறேன். இதன்மூலம் நாடார் சமுதாய மக்களும் என்னை ஆதரிப்பார்கள்' என மனம் திறந்து பேசியிருக்கிறார். தற்போது திரையரங்குகளிலும் பழனிசாமி அரசின் செயல்பாடுகளை, செய்தி விளம்பரத் துறை விவரிக்கத் தொடங்கிவிட்டது. பதவியை விட்டுவிடாமல் இணைப்பு முயற்சிகளைப் பேசத் தொடங்கியிருக்கிறார் பழனிசாமி