அடையாற்றின் மொத்த நீளம் 42 கி.மீ.கள். திருநீர்மலை அருகே செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீர் இந்த ஆற்றில்தான் கலக்கிறது. சென்னை மாநகருக்குள் உள்ள ஜாபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் வழியாக பயணிக்கும் இந்த ஆறு சீனிவாசபுரம் - பெசண்ட் நகருக்கு இடையே வங்காள விரிகுடாவில் கலக்கிறது. ஏறத்தாழ, நூறு ஏரிகளின் உபரி நீர், இந்த ஆற்றில் கலக்கிறது. இந்த ஆற்றங்கரை பல நினைவுகளை சுமந்து கொண்டு இருக்கிறது. வரலாற்றில் மிக முக்கியதுவம் வாய்ந்த போராக கருதப்படும் ‘அடையாறு போர்’ இங்கு தான் நிகழ்ந்து இருக்கிறது. இன்று உலகம் முழுவது கிளை பரப்பி இருக்கும் பிரம்ம ஞான சபையின் தலைமையகம் இந்த ஆற்றங்கரை ஓரமாகதான் உருவானது.