தூக்கம் கெடுக்கும், எரிச்சலை உண்டாக்கும், நிம்மதிபோக்கும்... கொசுத்தொல்லை! இவ்வளவு ஏன், மலேரியா, டெங்கு, சிக்கன்குன்யா, ஜிகா போன்ற கடுமையான நோய்களைக்கூட ஏற்படுத்திவிடும் சின்னஞ்சிறிய கொசு! இவற்றை விரட்ட மனிதர்கள் எத்தனையோ வழிகளில் முயற்சி செய்து பார்த்துவிட்டார்கள். எலெக்ட்ரிக்கல் பேட், சுருள், காயில், வலை, லோஷன்... நீண்டுகொண்டே போகிறது பட்டியல். ஆனால் முழுமையாக ஒழிக்க முடியவில்லை. கொசுக்களை விரட்ட நம் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத எளிய, ஆரோக்கியமான வழிமுறைகளும் இருக்கின்றன.