விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக நேற்று தகவல் பரவியது. இதையடுத்து, காவல்துறையினர் மெரினாவில் குவிக்கப்பட்டனர். இதனிடையே, மெரினாவில் உள்ள கடைகளை இன்று காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அடைக்க வியாபாரிகளை வலியுறுத்தினர். வருமானம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் ஆவேசப்பட்டனர்.